உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிரகதி மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

பிரகதி மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

நியூசிலாந்தை சேர்ந்தவருக்கு, கோவை பிரகதி மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்ததாவது:கோவை சித்தாபுதூரில் உள்ள பிரகதி மருத்துவமனை, எலும்பு முறிவு மருத்துவ துறையில் கடந்த, 10 ஆண்டுகளாக பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. மருத்துவமனையின் தலைமை மருத்துவரும், எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான பாலசுப்பிரமணியன், ஆயிரத்துக்கு மேற்பட்ட எலும்பு அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்து உள்ளார். சமீபத்தில் நியூசிலாந்து நாட்டை சேர்ந்த 'டிராய் ஹிர்ஸ்ட்' என்பவருக்கு, இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்த இரண்டு நாட்களிலேயே, அவர் எழுந்து நடக்க ஆரம்பித்தார். டிராய் ஹிர்ஸ்ட்டும், குடும்பத்தினரும் மருத்துவ குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ