உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் ஆசியா நகை கண்காட்சி : பொதுமக்களுக்கு அரிய வாய்ப்பு

கோவையில் ஆசியா நகை கண்காட்சி : பொதுமக்களுக்கு அரிய வாய்ப்பு

கோவை;கோவை ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள தாஜ் விவாந்தா ஓட்டலில், ஆசியா நகை கண்காட்சி, நேற்றுமுன்தினம் துவங்கியது. பேஷன் டிசைனர் மற்றும் நகை வடிவமைப்பாளர்அபர்ணா சுங்கு, ஜிடோ கோவை அமைப்பின் தலைவர் ராகேஷ் மேத்தா ஆகியோர் துவக்கி வைத்தனர்.நுண்தங்க நகைகள், வைரம், பிளாட்டினம், பராம்பரிய, திருமண நகைகள், ஆன்டிக், அரிதான கற்கள் பதித்த நகைகள், குண்டன், ஜடாவு மற்றும் போல்கி, வெள்ளி நகைகள், கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, பெங்களூரு கஜராஜ் ஜூவல்லரி, ஸ்ரீகணேஷ் டயமண்ட் ஜூவல்லரி, கேயா ஜூவல்லர்ஸ், டில்லியை சேர்ந்த ஷேகல் ஜூவல்லர்ஸ், மும்பை நேகா கிரியேஷன்ஸ், மும்பை ரேணுகா பைன் ஜூவல்லர்ஸ், கோவை கற்பகம் ஜூவல்லர்ஸ், டில்லி சிரியன்ஸ் ஜூவல்ஸ், மும்பை ஜிவா ஜூவல்லரி உட்பட பிரசித்தி பெற்ற நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இந்தியாவின் மிகச்சிறந்த, 30 நகை வடிவமைப்புகள் மற்றும் பெயர் பெற்ற நகை வகைகள் ஒரே இடத்தில் வாங்க முடியும். நிறைவு நாளான இன்று, காலை 10:30 முதல் இரவு 8:00 மணி வரை கண்காட்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ