உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இளைஞர் மீது தாக்குதல் இருதரப்பினர் மீது வழக்கு

இளைஞர் மீது தாக்குதல் இருதரப்பினர் மீது வழக்கு

மேட்டுப்பாளையம்:கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சியின் 23வது வார்டு, ரயில்வே காலனி சாலையில் வசிப்பவர் கவுதம் சக்கரவர்த்தி, 31. சினிமா துறையில் பணிபுரிந்து வருகிறார். இவர், தன் பகுதியில் துாய்மை பணி முழுமையாக மேற்கொள்ளவில்லை எனக்கூறி, மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகத்திடமும், முதல்வர் தனிப்பிரிவுக்கும் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பணியாளர்கள் வந்து அப்பகுதியில் துாய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்களை, 23வது வார்டு காங்., கவுன்சிலர் கவிதா, 42, அவரது கணவர் புருஷோத்தமன், 57, உள்ளிட்டோர் அனுப்பி விட்டதாகக் கூறப்படுகிறது.நேற்று முன்தினம் கவிதா, புருஷோத்தமன், அவர்களது மகன் கார்த்திக், 23, அவரது நண்பர் நசீர், 48 ஆகியோர், கவுதம் வீட்டின் அருகே சென்றபோது, இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின், நால்வரும் கவுதமை தாக்கியதாகக் கூறப்படுகிறது. அவரை மீட்ட உறவினர்கள், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல் உதவி அளிக்கப்பட்ட பின், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து இரு தரப்பினரும் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை