உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேசிய கார் போட்டியின் போது  மாரடைப்பால் வீரர் மரணம் 

தேசிய கார் போட்டியின் போது  மாரடைப்பால் வீரர் மரணம் 

கோவை;கோவையில் நடக்கும் தேசிய அளவிலான கார் சாம்பியன்ஷிப் போட்டியில், கார் ஓட்டிக்கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு, கேரளாவை சேர்ந்த வீரர் ஒருவர் உயிரிழந்தார்.புளூ பேண்ட் எப்.எம்.எஸ்.சி.ஐ., இந்திய தேசிய ரேலி சாம்பியன் ஷிப் 2024ன் மூன்றாம் சுற்றுப்போட்டி, கோவையில் நேற்று துவங்கியது.எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் உள்ள, எஸ்.எம். ஆக்ரோ வளாகத்தில் நேற்று போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பல்வேறு மாநிலங் களில் இருந்து, 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், ஐ.என்.ஆர்.சி., 3 பிரிவில் பங் கேற்ற, கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த பிரேம் லால், 47 என் பவர், 'டிரையல்' சுற்றில்காரை ஓட்டிப் பார்த்துக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டது. அவரை பரிசோதனை செய்த மருத்துவகுழுவினர், உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பிரேம்லாலுக்கு திருமணமாகி, மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ