| ADDED : ஆக 10, 2024 03:02 AM
சூலுார்:தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து, ராயல் கேர் நர்சிங் மருத்துவமனை சார்பில், மனித சங்கிலி நடந்தது. உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, நீலம்பூர் ராயல் கேர் நர்சிங் கல்லுாரி சார்பில், விழிப்புணர்வு மனித சங்கிலி நீலம்பூர் பஸ் ஸ்டாண்டில் நடந்தது. கல்லுாரி முதல்வர் திலகவதி, நிர்வாகி கீர்த்தனா, ஊராட்சி தலைவர் சாவித்திரி சண்முகசுந்தரம், தலைமை செயல் அதிகாரி மணி செந்தில்குமார் மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு, தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில், ராயல் கேர் மருத்துவமனை தலைவர் மாதேஸ்வரன் பேசுகையில், குழந்தையின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த தாய்ப்பால் அவசியம், என்றார். தாய்பால் ஆலோசகர் நிரோஷா, தாய்ப்பால் கொடுப்பதால், தாயுக்கும், குழந்தைக்கும் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினார். பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.