மேலும் செய்திகள்
சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்
3 hour(s) ago
கோவை மாவட்டத்துக்கு புது டி.ஆர்.ஓ., நியமனம்
8 hour(s) ago
கஞ்சா கடத்தல் வழக்கில் வாலிபருக்கு 4 ஆண்டு சிறை
8 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சிகள்
8 hour(s) ago
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, சோழனூர் ஊராட்சியில் விவசாயிகளுக்கு 'அட்மா' திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.கிணத்துக்கடவு, சோழனூர் ஊராட்சியில் உள்ள விவசாயிகளுக்கு 'அட்மா' திட்டத்தின் வாயிலாக மண் வள மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், கிணத்துக்கடவு தொழில் நுட்ப மேலாளர் மேகலாதேவி, கிணத்துக்கடவு வேளாண் உதவி இயக்குநர் அனந்தகுமார், மணக்கடவு வாணவராயர் கல்லூரி பயிர் நோயியல் துறை உதவி பேராசிரியர் சிவா, வேளாண் உதவி அலுவலர் மகபூப்பாட்சா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில், 'அட்மா' திட்டம் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மத்திய, மாநில அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களான, பயிர் காப்பீடு, பி.எம்.கிசான், மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் குறித்து தெரிவிக்கப்பட்டது.மேலும், மண் பரிசோதனை செய்து, மண்ணில் உள்ள சத்துக்களை அறிந்து அதற்கேற்றவாறு பயிர்களுக்கு உரம் இடவேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.உயிரியல் பூஞ்சாணக்கொல்லிகளை பயன்படுத்தும் அளவுகள் மற்றும் மண் வளத்தை பெருக்கும் முறைகள், தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் வாயிலாக உழவு மானியம், வேளாண் காடுகள் திட்டத்தில் வழங்கப்படும் மரக்கன்றுகள் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
3 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago