உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 100 அடியை கடந்தது ஆழியாறு அணை: விவசாயிகள் மனம் குளிர்ந்தது

100 அடியை கடந்தது ஆழியாறு அணை: விவசாயிகள் மனம் குளிர்ந்தது

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, ஆழியாறு அணை நீர்மட்டம், 100 அடிக்கு மேல் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பி.ஏ.பி., பாசனத்தில், முக்கிய அணையான ஆழியாறு, கடந்த 1962ம் ஆண்டு கட்டப்பட்டது. 120அடி கொள்ளளவு கொண்ட அணையில், சேகரிக்கப்படும் தண்ணீர் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினியோகிக்கப்படுகிறது.இதன் வாயிலாக, பழைய ஆயக்கட்டு பாசனத்தில், 6,400 ஏக்கரும், புதிய ஆயக்கட்டில், 42 ஆயிரம் ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன. மேலும், ஒப்பந்தப்படி கேரளாவுக்கும் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.கடந்தாண்டு போதிய பருவமழை இல்லாததால், அணைக்கு நீர்வரத்து இல்லை. கடந்தாண்டு இதே நாளில் மொத்தம் உள்ள, 120 அடியில், 58.30 அடிக்கு நீர்மட்டம் இருந்தது. பருவமழை கை கொடுக்காததால், சாகுபடிக்கு தண்ணீர் முறையாக வழங்க முடியாத சூழலில், நிலை பயிர்களை காப்பாற்ற மட்டுமே நீர் வழங்கப்பட்டது. வறட்சி காலத்தில் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.இந்தாண்டு பருவமழை கை கொடுத்ததால் அணை நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது.கடந்த, மூன்று நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த, 16ம் தேதி 91 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்றுமுன்தினம், 4 அடி உயர்ந்து, 95.80 அடியானது.நேற்றும் தொடர் நீர் வரத்தால் அணை நீர்மட்டம் சதம் அடித்தது. மொத்தம் உள்ள, 120 அடியில், 101.10 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது. வினாடிக்கு, 3,814 கனஅடி நீர் வரத்து இருந்தது.அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். நீர்மட்ட உயர்வால், மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள், முழு கொள்ளளவும் நீர் நிரம்பி, இந்தாண்டு தட்டுப்பாடின்றி பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்கும், என, நம்பிக்கை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

krishnan
ஜூலை 19, 2024 12:21

வெள்ள, மழை நீரை எல்ல கிராம குளங்களுக்கு நிரப்ப அந்த அந்த பஞ்சாயத்து தலைவர்கள் முயற்சி எடுக்க வேண்டும் . சும்மா உட்கார்ந்து கொண்டு காது மூக்கு நொண்டி கொண்டு இருக்க கூடாது. கலெக்டர் ஒழுங்காக வேலை செய்யணும்


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை