உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மேட்டுப்பாளையத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை

மேட்டுப்பாளையத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை

மேட்டுப்பாளையம்;பக்ரீத் பண்டிகை முன்னிட்டு, ஈத்கா பள்ளிவாசலில் நடந்த சிறப்பு தொழுகையில், ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். மேட்டுப்பாளையத்தில் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர். ஓடந்துறை ஊராட்சி ஊட்டி சாலையில் உள்ள ஈத்கா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் மேட்டுப்பாளையம் நகரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களில் இருந்தும், இஸ்லாமியர்கள் ஊர்வலமாக வந்து, சிறப்புத் தொழுகையில் பங்கேற்றனர். வேலூர் அரபிக் கல்லூரி பேராசிரியர் பாகவி அப்துல் ஹமீத் பக்ரீத் பண்டிகையின் சிறப்புகள் குறித்து விளக்கி கூறினார். அதைத் தொடர்ந்து காலை 8:30 மணிக்கு பெரிய பள்ளிவாசல் இமாம் கலிபுல்லா சிறப்பு தொழுகை நடத்தினார். இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று, ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோன்று காரமடை, சிறுமுகையில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை