உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போலீசிடம் இருந்து தப்ப குளத்தில் குதித்தவர் பலி

போலீசிடம் இருந்து தப்ப குளத்தில் குதித்தவர் பலி

கோவை:கோவை, ராமநாதபுரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, கோவை சுங்கம் பைபாஸ் ஆல்வின் நகர் பகுதியில், மூவர் போலீசாரை கண்டதும் ஓடத் துவங்கினர். போலீசார் அவர்களை துரத்தியதில் இருவர் சிக்கினர். மற்றொருவர் தப்பினார்.விசாரணையில், அவர்கள், ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஸ்ரீஹரி, 18, ஒண்டிபுதுாரை சேர்ந்த தரணீஸ்வரன், 18, தப்பியோடியவர் ஒண்டிபுதுாரை சேர்ந்த விஸ்வா, 18 என்பதும், மூவரும் தனியார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதும் தெரிந்தது. கோவை, உக்கடம் புல்லுக்காடு பகுதியை சேர்ந்த பசுபதி, 19, என்பவரிடம் மொபைல்போன் திருடி தப்பியபோது, போலீசாரை கண்டு பயந்து ஓடியுள்ளனர். தப்பியோடிய விஸ்வா, சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள வாலாங்குளத்தில் குதித்து, நீந்தி தப்பிக்க முயன்றார். குளத்தில் தொடர்ந்து நீந்த முடியாததால், அங்கு பணியில் இருந்த மாநகராட்சி செக்யூரிட்டி ரூபனிடம், தன்னை காப்பாற்றுமாறு அலறியுள்ளார். ரூபன் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு துறையினர் மீட்பதற்குள் விஸ்வா நீரில் மூழ்கி இறந்தார். ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ