மேலும் செய்திகள்
இ-சிகரெட், லேப்டாப் பறிமுதல்
5 hour(s) ago
மாநில கூடைப்பந்து போட்டி; வீரர், வீராங்கனை சுறுசுறுப்பு
5 hour(s) ago
கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
5 hour(s) ago
லிங்கனுாரில் குறுகிய தரைப்பாலத்தில் தடுமாற்றம்!
5 hour(s) ago
கோவில்பாளையம்;வெள்ளானைப்பட்டி கிராமத்தில், தரிசு நிலத்தை விளை நிலமாக மாற்றும் திட்டம் துவங்கியது. தமிழக அரசின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், சர்க்கார் சாமக்குளம் வட்டாரத்தில், வெள்ளானைப்பட்டி ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊராட்சியில் நீண்ட நாட்களாக விவசாயம் செய்யாமல் தரிசாக உள்ள நிலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலத்தை சாகுபடிக்கு உகந்த விளைநிலமாக மாற்றுவதற்கு, வேளாண் பொறியியல் துறை வாயிலாக, மின் இணைப்புடன், மோட்டார் பொருத்தி ஆழ்துளை கிணறு அமைத்து இலவசமாக தருவது, தரிசு நிலத்தில் முட்புதர்களை அகற்றி நிலத்தை சமன்படுத்தி செயல் விளக்க திடல் அமைத்தல், மரக்கன்று நடுதல் ஆகியவை அரசு மானியத்தில் செய்யப்பட உள்ளன.இத்திட்ட துவக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட வேளாண் துணை இயக்குனர் (மாநில திட்டம்) விஜய கல்பனா தலைமை வகித்தார். எஸ்.எஸ்.குளம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் நாமத்துல்லா பேசுகையில், 'இந்தத் திட்டத்தில் தரிசு நிலம், விளை நிலமாக மாற்றப்படுகிறது. விவசாயிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் நல்ல வருமானம் பெறலாம்' என்றார்.வேளாண் துணை அலுவலர் வேலுசாமி, கிராம நிர்வாக அலுவலர் லட்சுமி பாபு மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago