உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாரதியார் பல்கலை அலுவலர்கள் தர்ணா

பாரதியார் பல்கலை அலுவலர்கள் தர்ணா

வடவள்ளி:பாரதியார் பல்கலையில், பொறுப்பு பதிவாளரை கண்டித்து, பல்கலைக்கழக அலுவலர் சங்கத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.பாரதியார் பல்கலை அலுவலர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடத்த, பதிவாளர் (பொ) ரூபா அனுமதி வழங்கவில்லை. இதனையடுத்து, கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்தும், பல்கலையில் நிர்வாகம் சீரழிந்துள்ளதை கண்டித்தும், நேற்று மாலை, பதிவாளர் அறையில், அலுவலர் சங்கத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.அதனைத்தொடர்ந்து, பல்கலையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக அலுவலர் சங்கத்தின் அறையில், சங்கத் தலைவர் சிவக்குமார் தலைமையில், செயற்குழு கூட்டம் நடந்தது. 18 தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்