உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த பா.ஜ., வேட்பாளர்

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த பா.ஜ., வேட்பாளர்

தொண்டாமுத்தூர் : தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், பா.ஜ., சார்பில், லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் வசந்தராஜன், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.நாடு முழுவதும் லோக்சபா தேர்தல், கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. இதில், பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், பா.ஜ., சார்பில், கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன், வேட்பாளராக போட்டியிட்டார். இதில், வசந்தராஜன் மூன்றாம் இடம் பிடித்தார். இந்நிலையில், தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், நேற்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதில், ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இதில், வசந்தராஜன் பேசுகையில், அ.தி.மு.க.,வின் கோட்டை என்ற தொண்டாமுத்தூர் தொகுதியில், 60 ஆயிரம் பேர், பா.ஜ.,விற்கு வாக்களித்ததற்கு நன்றி. இதிலிருந்து, திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பா.ஜ., உருவெடுத்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. தேர்தலில், தோல்வியடைந்திருந்தாலும், மத்திய அரசின் மூலமாக, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை