உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நகைப்பட்டறை  உரிமையாளருக்கு பிளேடு வெட்டு; வாலிபர் கைது

நகைப்பட்டறை  உரிமையாளருக்கு பிளேடு வெட்டு; வாலிபர் கைது

கோவை;செல்வபுரம், சண்முகராஜபுரத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்,31. தனது சகோதரருடன் சேர்ந்து நகைப்பட்டறை நடத்திவருகிறார். கடந்த, 7ம் தேதி இரவு, 11:00 மணியளவில் அதே பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, நபர் ஒருவர் ரோட்டில் குறுக்கும் நெடுக்குமாக சென்று கொண்டிருக்க, சந்தோஷ்குமார் ரோட்டை மறிக்காமல், ஓரமாக செல்லுமாறு கூறியுள்ளார்.அந்நபர் திடீரென சந்தோஷ்குமாரின் கழுத்து மற்றும் இடதுபுற முழங்கை பகுதியில், பிளேடால் வெட்டி காயப்படுத்தி தலைமறைவானார். செல்வபுரம் போலீசில் சந்தோஷ்குமார் புகார் அளித்த நிலையில், சண்முகாபுரத்தை சேர்ந்த உசைன்,33, என்பவரை போலீசார் நேற்று, கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்