உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாட்டு வண்டி -- பஸ் மோதல்; விபத்தில் சிறுவன் உயிரிழப்பு

மாட்டு வண்டி -- பஸ் மோதல்; விபத்தில் சிறுவன் உயிரிழப்பு

தொண்டாமுத்தூர்;குனியமுத்தூர், ரைஸ் மில் ரோட்டை சேர்ந்த ரமேஷ் பாபு என்பவரின் மூத்த மகன் சுரேஷ் மற்றும் இளைய மகன், ஜெய்தேவ்,14 ஆகிய இருவரும், மாட்டு வண்டியில் பூண்டி, வெள்ளியங்கிரிக்கு சென்று விட்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.மாட்டு வண்டியை சுரேஷ் ஓட்டி வந்துள்ளார். ஜெய்தேவ் பின்னால் அமர்ந்து வந்து கொண்டிருந்தார். சிறுவாணி மெயின் ரோட்டில், பேரூர் செட்டிபாளையம் மயானம் அருகே வந்து கொண்டிருந்தபோது, பூண்டியிலிருந்து கோவை நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த அரசு பஸ், மாட்டு வண்டி மீது மோதியுள்ளது. இதில், மாட்டு வண்டியில் இருந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். ஜெய்தேவ்விற்கு பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே இறந்தார். பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ