உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யானைகள் கணக்கெடுக்கும் பணி; வனத்துறையினர் தீவிரம்

யானைகள் கணக்கெடுக்கும் பணி; வனத்துறையினர் தீவிரம்

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் யானைகள் கணக்கெடுக்கும் பணி இம்மாதம், 23ம் தேதி துவங்குகிறது.தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேச மாநில வனப்பகுதிகளில் நடப்பு ஆண்டுக்கான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணிகள் வரும், 23ம் தேதி தொடங்கி, தொடர்ந்து மூன்று நாட்கள் நடக்கிறது.கோவை வனக்கோட்டத்தில் மதுக்கரை, கோவை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட, 7 வனச்சரகங்களில் உள்ள, 42 பிளாக்குகளில் நடக்கிறது. இப்பணியில் வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வன காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்டோர் ஈடுபடுகின்றனர்.இது குறித்து, பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் கூறுகையில்,' யானைகள் கணக்கெடுப்பு மூன்று விதமாக, மூன்று நாட்களில் மேற்கொள்ளப்பட உள்ளன. முதல் நாள் யானைகளை நேரடியாக கண்டு, அவற்றை கணக்கெடுக்கும் பணி நடக்கும். இரண்டாம் நாள் யானைகளின் எச்சங்களை வைத்து கணக்கீடு செய்யப்படும். மூன்றாம் நாள் நீர் நிலைகளில் யானைகளின் நடமாட்டம் உள்ளதா என கண்டறிந்து, அது வைத்து கணக்கீடு செய்யப்படும்.பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள ஒன்பது பீட்டுக்களில், 18 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இது தவிர, வனவர்கள், வனச்சரக அலுவலர் உள்ளிட்டோர் கணக்கெடுப்பு பணிகளை கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவர். கணக்கெடுப்பு போது கிடைக்கும் தகவல்கள் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை