உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள்

சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள்

அன்னுார்:முன்மாதிரி கிராமமான செம்மாணி செட்டிபாளையத்தில் சாதித்த மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர். மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சியில், செம்மாணிசெட்டி பாளையத்தில், ஏ.பி.ஜே., அப்துல் கலாமின் கனவு காணும் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. சாதித்தவர்கள் கவுரவிக்கப்படுகின்றனர்.இந்த ஆண்டு எல்.கே.ஜி., முதல் 12ம் வகுப்பு வரை, அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் பல்வேறு திறன் போட்டிகளில் சாதித்தவர்கள், சாதித்த ஆசிரியர், ஆசிரியைகள் ஆகியோருக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.மாவட்ட, மாநில அளவில் சாதித்தவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. அப்துல் கலாம் மன்ற நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர். விழாவில் 400க்கும் மேற்பட்டோர் கவுரவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை