உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரவுடிகளின் அட்டகாசத்துக்கு செக் : மேற்கு மண்டல ஐ.ஜி., சூளுரை

ரவுடிகளின் அட்டகாசத்துக்கு செக் : மேற்கு மண்டல ஐ.ஜி., சூளுரை

கோவை : சென்னை டி.ஜி.பி., அலுவலக பொதுப்பிரிவு ஐ.ஜி.,யாக பணியாற்றி வந்த செந்தில்குமார், மேற்கு மண்டல ஐ.ஜி.,யாக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''மேற்கு மண்டலத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதுடன், ரவுடிகளின் அட்டகாசம் கட்டுப்படுத்தப்படும். போலீஸ் ஸ்டேஷன்களுக்கு செல்லும் பொது மக்களிடம், போலீசார் நல்ல அணுகுமுறையை கையாள வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் மோசடிகளில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க, தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பெண்கள், குழந்தைகள் மீதான குற்றங்களுக்கு, கடும் நடவடிக்கைகள் பாயும். போதை பொருட்கள் புழக்கம், விபத்துகளை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்,'' என்றார்.கோவை எஸ்.பி.,யாக இருந்த பத்ரிநாராயணன், கோவை பயங்கரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி.,யாக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி