உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்; பள்ளிகளில் உறுதிமொழி

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்; பள்ளிகளில் உறுதிமொழி

உடுமலை : உடுமலை பள்ளிகளில், மாணவர்கள் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி எடுத்தனர்.பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில், நாட்டுநலப்பணி திட்டம் சார்பில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.உதவித்தலைமையாசிரியர் ஜெகநாதஆழ்வார்சாமி தலைமை வகித்தார். அறிவியல் ஆசிரியர் சுரேஷ்குமார் வரவேற்றார்.என்.எஸ்.எஸ்., அலுவலர் சரவணன், 'குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறையும், மாணவர் கடமையும்' என்ற தலைப்பில் பேசினார். என்.எஸ்.எஸ்., மாணவி இந்துமதி குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி வாசித்தார்.அனைத்து மாணவர்களும் உறுதிமொழி ஏற்றனர். விலங்கியல் ஆசிரியர் ஜான்பாஷா நன்றி தெரிவித்தார்.* உடுமலை ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், ஆசிரியர் கண்ணபிரான் குழந்தை தொழிலாளர் முறை அகற்றுவதன் முக்கியத்துவம் குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.தொடர்ந்து அது குறித்த சட்டம் குறித்தும், மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. பின்னர் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ