உள்ளூர் செய்திகள்

சிட்டி கிரைம்

ரூ.2.60 லட்சத்துடன் 'எஸ்கேப்'

சென்னை, பள்ளிக்கரணையை சேர்ந்த விக்னேஷ், சிங்காநல்லுார் உப்பிலிபாளையத்தில் வசிக்கிறார். இவர் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பிரியாணி ஹோட்டலின் பங்குதாரராக உள்ளார். இவர் வரவு - செலவு கணக்கு பார்க்கும்பொழுது இங்கு காசாளராக பணிபுரியும் கோபி கிருஷ்ணன் ரூ.1.70 லட்சம் திருடியதுடன், மொபைல் போன் செயலி வாயிலாக வாடிக்கையாளர்கள் அனுப்பிய ரூ.90 ஆயிரத்தையும், தனது வங்கி கணக்குக்கு அனுப்பி விட்டு தலைமறைவாகியுள்ளார். விக்னேஷ் அளித்த புகாரின் பேரில், ஆர்.எஸ்.புரம் போலீசார் கோபி கிருஷ்ணனை தேடுகின்றனர்.

மர்ம நபர்கள் நகை பறிப்பு

வேலாண்டிபாளையம், கொண்டசாமி நாயுடு வீதியை சேர்ந்தவர் சரவணன். இவரது தயார் மாணிக்கம் டாக்டர் ராமசாமி லே-அவுட், திலகவதி இல்லம் ரோட்டில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், அவரது கழுத்தில் இருந்த ஒரு சவரன் தங்க நகையை பறித்து தப்பினர். சரவணன் அளித்த புகாரின் பேரில், சாய்பாபாகாலனி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை