உள்ளூர் செய்திகள்

சிட்டி கிரைம்

பள்ளி அருகே புகையிலை

மசக்காளிபாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ்,49. இவர் மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளி அருகே பெட்டி கடை நடத்திவருகிறார். சிங்காநல்லுார் போலீசார் ரோந்து சென்றபோது ரமேஷ் கடையில், சிகரெட், பீடி உள்ளிட்ட, 628 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் ரமேசை கைது செய்து, ஜாமினில் விடுவித்தனர்.

கஞ்சா விற்பனை

தெலுங்குபாளையம் ரோடு, ராமச்சந்திரா நகரில் கஞ்சா விற்பனை நடப்பதாக செல்வபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த போலீசார் செல்வபுரம் கல்லாமேடு பகுதியை சேர்ந்த சவுந்தரராஜன்,29, மற்றும் பனைமரத்துாரை சேர்ந்த குமார்,38, ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து, 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவான ராகுல், சுபாஷினி ஆகியோரை தேடுகின்றனர்.

போன் திருடியவர் கைது

குனியமுத்துார், முல்லை நகரை சேர்ந்தவர் பிரோஸ்,24. இவர் காந்திபுரம், 100 அடி ரோட்டில் மொபைல் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த சினோஜ்,22, வாடிக்கையாளர் போல் மொபைல் கடைக்கு வந்தவர், விலை உயர்ந்த மொபைல் போனை திருடிசென்றார். புகாரின் அடிப்படையில், 'சிசிடிவி' காட்சி பதிவுகளை வைத்து சினோஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ