உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிட்டி கிரைம் செய்திகள்

சிட்டி கிரைம் செய்திகள்

வாகன விபத்தில் இருவர் பலி

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நரபால்குமார்,23, மற்றும் சகோதரர்களான கிரநாத்,19, ஜபர்நாத்,25, ஆகியோர் கோவை செட்டிவீதியில் உள்ள தங்கநகை பட்டறையில் வேலை செய்துவந்தனர். கடந்த, 4ம் தேதி இவர்கள் மூவரும் பேரூர் மெயின் ரோடு, தெலுங்குபாளையம் அருகே இரு சக்கர வாகனத்தில் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி ஒருவழிப்பாதையில் வேகமாக சென்றனர். நரபால்குமார் ஹெல்மெட் அணியாது வேகமாக சென்ற நிலையில், கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி வந்த கார் மீது மோதினர். படுகாயமடைந்த மூவரும் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.இதில், நரபால்குமார் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, சிகிச்சைபலனின்றி நேற்று முன்தினம் கிரநாத் உயிரிழந்தார். மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

காசோலை மோசடி

ஆவாரம்பாளையம் அருகே திருமலை வீதியை சேர்ந்தவர் செல்வகுமார்,40; சாக்லேட் வியாபாரி. இவரிடம் மற்றொரு சாக்லேட் வியாபாரியான அன்வர் உல்லா என்பவர் தொடர்ந்து பொருட்கள் வாங்கி விற்பனை செய்துவந்துள்ளார்.இந்நிலையில், ரூ.9 லட்சத்து, 53 ஆயிரத்து, 58க்கான பொருட்களை வாங்கியதற்கு அன்வர் உல்லா காசோலையாக கொடுத்துள்ளார்.ஆனால், வங்கி கணக்கியில் பணம் இல்லாததால் காசோலை 'பவுன்ஸ்'ஆகியுள்ளது. இதுகுறித்து, செல்வகுமார் பீளமேடு போலீசில் புகார் அளிக்க, விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்