உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாரம் முழுவதும் வகுப்பு... இனி கொஞ்சம் விளையாட்டு!

வாரம் முழுவதும் வகுப்பு... இனி கொஞ்சம் விளையாட்டு!

ரத்தினம் கல்லுாரியில் நடந்த பேராசிரியர்களுக்கான விளையாட்டு போட்டியில், 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரி சார்பில், ஆண்டுதோறும் பேராசிரியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தாண்டுக்கான விளையாட்டு போட்டிகள், 'குருஷேத்ரா 2024' என்ற பெயரில், ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் கல்லுாரி வளாகத்தில் நடந்தது. போட்டியை, ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்துார் சவுத் தலைவர் பாலசுப்ரமணியம், செயலாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் துவக்கி வைத்தனர். ரத்தினம் கல்லுாரியின் முதன்மை செயல் அதிகாரி மாணிக்கம், முதல்வர் பாலசுப்ரமணியன், டீன் சபரி, துணை முதல்வர் சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர். 38 கல்லுாரிகளை சேர்ந்த 437 பேர் பங்கேற்றனர். பேராசிரியர்களுக்கு வாலிபால், கூடைப்பந்து, இறகுப்பந்து, செஸ், கேரம், கிரிக்கெட், த்ரோபால் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் பேராசிரியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, சிறப்பாக விளையாட்டை வெளிப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ