| ADDED : ஆக 01, 2024 12:51 AM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு ஒன்றியத்தில் மக்கள் குறைகளை விரைவாக தீர்க்கும் வகையில், மக்களுடன் முதல்வர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து மூன்றாவது முகாமாக, நெ.10.முத்தூர் ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், நெ.10.முத்தூர், கோவிந்தாபுரம், தேவராயபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கு நடந்தது.இதில்,மாவட்ட துணை கலெக்டர் முருகேசன், கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் சரவணன், துறை சார்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, சமூக நலத்துறை, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை உள்ளிட்ட, 15 அரசு துறைகள் பங்கேற்றனர். மக்கள் பலர் தங்கள் குறைகள் மற்றும் தேவைகளை மனுவாக அதிகாரிகளிடம் கொடுத்தனர். முகாமில், மொத்தம், 431 மனுக்கள் பெறப்பட்டன.