உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை கார் குண்டு வெடிப்பு: 14வது நபர் மீது குற்றப்பத்திரிகை

கோவை கார் குண்டு வெடிப்பு: 14வது நபர் மீது குற்றப்பத்திரிகை

கோவை : உக்கடம், கோட்டைமேடு பகுதியில் நடந்த கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 14வது நபர் மீது, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.கோவை, உக்கடம் அருகேயுள்ள, கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் அருகே, 2022-ம் ஆண்டு அக்., மாதம் 23-ம் தேதி நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, தற்போது வரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில், கடைசியாக கைது செய்யப்பட்ட, போத்தனூர் திருமலை நகர், மதீனா அவென்யூ பகுதியை சேர்ந்த தாஹா நசீர், 27 மீது, சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று துணை குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ