உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓட்டு எண்ணும் மையத்தில் கோவை கலெக்டர் ஆய்வு 

ஓட்டு எண்ணும் மையத்தில் கோவை கலெக்டர் ஆய்வு 

கோவை : கோவையில் ஓட்டு எண்ணும் மையத்தில், கலெக்டர் கிராந்திகுமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார். லோக்சபா தேர்தல் முடிந்த பின், மின்னணு ஓட்டுபதிவு இயந்திரங்கள் கோவையில் ஓட்டு எண்ணும் மையமான, அரசு தொழில்நுட்ப கல்லுாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. நீலகிரி தொகுதியில் ஓட்டு எண்ணும் மையத்தில், கண்காணிப்பு கேமரா சில நாட்களுக்கு முன், 20 நிமிடம் செயல் இழந்ததாக சர்ச்சை எழுந்தது.தவிர, ஈரோடு மற்றும் சில தொகுதிகளில், கண்காணிப்பு கேமராக்கள் செயல் இழந்ததாக தகவல்கள் வெளியாகின. தமிழகத்தில் நிலவும் அதிக வெப்பநிலையே, இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோவை கலெக்டர் கிராந்திகுமார் ஓட்டு எண்ணும் மையத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டார். கேமராக்களின் செயல்பாடுகளை கண்காணித்து, அலுவலர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினார். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட அறைக்கு சென்று பார்வையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ