உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை சுற்றுச்சூழல் ஆர்வலருக்கு ராஷ்டிரபதி பவனில் இன்று கவுரவம் 

கோவை சுற்றுச்சூழல் ஆர்வலருக்கு ராஷ்டிரபதி பவனில் இன்று கவுரவம் 

கோவை : அரசு போக்குவரத்துக்கழக கண்டக்டராக இருந்து கொண்டே, மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்த யோகநாதன், சுதந்திர தினமான இன்று, ராஷ்டிரபதி பவனில் நடக்கும் நிகழ்ச்சியில் கவுரவப்படுத்தப்படுகிறார். இவர் கடந்த 30 ஆண்டுகளில், இதுவரை, 3,00,000 மரக்கன்றுகளை நட்டுள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு, வழங்கப்படும் தேசிய இளைஞர் விருது உள்ளிட்ட, பல விருதுகளை பெற்றுள்ளார் .இன்று நடைபெறும் சுதந்திர தின விழாவையொட்டி, டில்லி ராஷ்டிரபதி பவனில் நடக்கும் நிகழ்ச்சியில், யோகநாதனை ஜனாதிபதி திரவுபதி முர்மு பாராட்டி கவுரவப்படுத்துகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை