உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவில் பெயரில் நன்கொடை வசூல்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு

கோவில் பெயரில் நன்கொடை வசூல்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே கோவில் பெயரில் நன்கொடை வசூல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என, சென்றாய பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் பொதுமக்கள், சப்-கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.சின்ன நெகமம் சென்றாய பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஜெயக்குமார் மற்றும் பொதுமக்கள் சார்பில், சப்-கலெக்டர் கேத்திரின் சரண்யாவிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:சின்ன நெகமம் சென்றாய பெருமாள் கோவிலில், ஹிந்து சமய அறநிலையத்துறையால் தேர்வு செய்யப்பட்டு கடந்தாண்டு டிச., 28ம் தேதி முதல் அறங்காவலர் குழு தலைவராக உள்ளேன்.கிராமத்தில் வசிக்காத வெளியூரை சேர்ந்த நபர், கோவிலுக்கு சம்பந்தமாக போலியான ஆதாரங்களை தயாரித்து, நெகமம் சப் - ரிஜிஸ்டர் அலுவலகத்தில் கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு தெரியாமல் அறக்கட்டளையை பதிவு செய்து, மாதந்தோறும் சென்றாய பெருமாள் கோவில் பெயரில் நன்கொடை வசூல் செய்து மோசடி செய்து வருகிறார்.மேலும், இவர்கள், நெகமம் போலீஸ் ஸ்டேஷனில் பொய்யான புகார் கொடுத்துள்ளனர். நெகமம் போலீஸ் இன்ஸ்பெக்டர், என்னை மொபைல்போனில் கூட தொடர்பு கொள்ளாமல் வீட்டுக்கு வந்து பெண்களிடம் விசாரணை செய்து தொந்தரவு செய்துள்ளார்.குறிப்பிட்ட நபரின் துாண்டுதலின் பேரில், இன்ஸ்பெக்டர் தொந்தரவு செய்கிறார். இது குறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி