பொள்ளாச்சி:பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில் புதிதாக துவக்கப்பட்ட அறக்கட்டளையின் வைப்புத் தொகை, சொற்பொழிவு, போட்டிகள் போன்றவற்றிக்கு பயன்படுத்தப்படவுள்ளது.பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில், 'கனகவேல் நினைவு அறக்கட்டளை' துவக்க விழா நடந்தது. கல்லுாரித் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை வகித்தார். செயலாளர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக மரபின்மைந்தன் முத்தையா கலந்து கொண்டார். முன்னதாக, கல்லுாரி முதல்வர் முத்துக்குமரன் அனைவரையும் வரவேற்றார்.வாணவராயர் வேளாண் கல்லுாரி சார்பில், 5 லட்சம் ரூபாய், சக்தி பைனானஸ் சார்பில், 10 லட்சம் ரூபாய், குமரகுரு கல்வி நிறுவனங்கள் சார்பாக, 10 லட்சம் ரூபாய் என, மொத்தம் 25 லட்சம் ரூபாய் அறக்கட்டளை வைப்பு நிதியாக வழங்கப்பட்டது.இந்த தொகை, அறக்கட்டளை வாயிலாக ஆண்டுதோறும் நடக்கும் சொற்பொழிவு, போட்டிகள் போன்றவற்றிக்கு பயன்படுத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டது. தவிர, நடப்பாண்டு நடைபெற்ற பேச்சு, கவிதை போட்டியில் முதலிடம் பிடித்தவருக்கு, 5 ஆயிரம் ரூபாய், இரண்டாமிடம் பிடித்தவர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய், மூன்றாமிடம் பிடித்தவருக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.கவிஞர் சிற்பி, இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு தலைவர் ராஜ்குமார் ஆகியோர் பேசினர். முடிவில், தமிழ் இலக்கியத்துறைத் தலைவர் ராஜ்குமார் நன்றி கூறினார். கருணாம்பாள், குமரகுரு கல்லுாரி இணைத் தாளாளர் சங்கர் வாணவராயர், வாணவராயர் வேளாண் கல்லுாரி தாளாளர் கற்பகவள்ளி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.