| ADDED : ஆக 17, 2024 11:08 PM
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் உடனிருப்போர் தங்கும் விடுதியை, கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேற்று திறந்து வைத்தார்.மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில், தேசிய நகர்ப்புற வாழ்வாதார குழுமம் திட்டத்தின் கீழ், ரூ.40 லட்சம் மதிப்பில், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் உடனிருப்போர் தங்கும் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. இதில் 20 ஆண்களும், 20 பெண்களும் தனித்தனியாக தங்குவதற்கு படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதனை நேற்று, மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், மேட்டுப்பாளையம் தாசில்தார் வாசுதேவன், மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா, நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வின், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கார்த்திக் மகாராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.----