உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடிநீர் சுத்திகரிப்பு மெஷின் பராமரிக்க மறுத்ததால் இழப்பீடு

குடிநீர் சுத்திகரிப்பு மெஷின் பராமரிக்க மறுத்ததால் இழப்பீடு

கோவை:குடிநீர் சுத்திகரிப்பு 'மெஷின்' பராமரிக்க மறுத்ததால், இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த கான்டிலால் ஹிரான் என்பவர், யுரேகா நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் குடிநீர் சுத்திகரிப்பு 'மெஷின்' வாங்கினார். 'மெஷின்'ஐ பராமரிக்க, 5900 ரூபாய் கட்டணம் பெற்றனர். அதற்கான ஒப்பந்த காலம் 2025, ஜன., வரை உள்ளது.இந்நிலையில், 'மெஷின்'ஐ பராமரிக்க கோரி, 2023, ஜன., 11ல் தகவல் கொடுத்தார். பல நாட்கள் ஆகியும் சர்வீஸ் செய்ய, ஆட்கள் அனுப்பி வைக்கப்படவில்லை. ஏற்கனவே செலுத்திய பராமரிப்பு கட்டணத்தை திருப்பி தரக்கோரி, நோட்டீஸ் அனுப்பியும் எந்த பதிலும் அளிக்கவில்லை.இதனால் இழப்பீடு கேட்டு, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் பிறப்பித்த உத்தரவில், 'மனுதாரரிடம் பெற்ற பராமரிப்பு கட்டணம், 5,900 ரூபாய் திருப்பி கொடுக்க வேண்டும், மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 10,000 ரூபாய், செலவுத்தொகை, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை