| ADDED : ஜூலை 29, 2024 02:16 AM
கோவை;பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்களையும், ரூ.22.56 லட்சத்தையும் தராமல் ஏமாற்றுவதாக, ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.கோவை, பாப்பநாயக்கன்பாளையம், பாரதியார் ரோட்டை சேர்ந்தவர் சக்திவேல்,35; தனியார் நிதி நிறுவன மேலாளர். இவரது நிறுவனத்துக்கான பண வசூல் பணியை, காந்திபுரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர், புரிந்துணர்வு ஒப்பந்தம் அடிப்படையில் மேற்கொண்டு வருகிறார்.ஒப்பந்தத்தின்படி, மாதத்தவணை செலுத்தாமல் இருக்கும் இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்வதும், மாத தவணை வசூல் செய்வதையும் ஆட்களை வைத்து மணிகண்டன் மேற்கொண்டு வருகிறார். ஆனால், ஒப்பந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை.வசூல் தொகையான ரூ.22 லட்சத்து, 56 ஆயிரத்தையும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களையும் நிதி நிறுவனத்திடம் மணிகண்டன் ஒப்படைக்காமல் இருந்துள்ளார். சக்திவேல் அளித்த புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.