| ADDED : ஏப் 26, 2024 11:59 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்து, கணினியில் பதிவு செய்யும் பணி நடக்கிறது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி செண்பகம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், கடந்த, 12ம் தேதி துவங்கியது. விடைத்தாள் திருத்த முகாம் அலுவலர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் வள்ளியம்மாள் முன்னிலையில் ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.கல்வி மாவட்டத்தில், 55 ஆயிரம் விடைத்தாள்கள் திருத்தப்பட்டன. அதில், 50 முதன்மை தேர்வர்கள், 50 கூர்ந்தாய்வாளர்கள், 500 உதவித்தேர்வாளர்கள் மற்றும், மதிப்பீட்டு அலுவலர்கள், அலுவலர்கள் உள்பட 600க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்த நிலையில், கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி நடப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.