உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இந்திய தொழில் கூட்டமைப்பு தென்பிராந்திய தலைவர் பொறுப்பேற்பு

இந்திய தொழில் கூட்டமைப்பு தென்பிராந்திய தலைவர் பொறுப்பேற்பு

கோவை;இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.,) 2024----25ம் ஆண்டுக்கான தென்பிராந்திய தலைவராக சந்திரா டெக்ஸ்டைல்ஸ் பிரைவேட் லிட்., நிர்வாக இயக்குநர் நந்தினி ரங்கசாமி, நேற்று பொறுப்பேற்றார்.இந்திய தொழில் கூட்டமைப்பின் தென்மண்டல துணைத் தலைவராகவும், 2010--11ல் தமிழ்நாடு மாநில கவுன்சிலின் முன்னாள் தலைவராகவும் இவர் பதவி வகித்தார். மேலும், 2022--23 கல்விதுணைக் குழுவின் முன்னாள் தலைவராக இருந்தவர்.இவர், இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய கவுன்சில் உறுப்பினர் ஆவார். தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் லிட் (டிட்கோ) குழுவில் இயக்குநராகவும், திருச்சி என்.ஐ.டி., நிர்வாகக்குழுவின் முன்னாள் உறுப்பினராகவும் பதவி வகித்தவர்.கடந்த 2020---21ல், கேரள மாநில கவுன்சில் தலைவராக இருந்தார். வர்த்தகம், சில்லறை வணிகம் மற்றும் சில்லறை நிதி ஆகியவற்றில், 135 ஆண்டுகால பாரம்பரியத்தைக் கொண்ட முத்துாட் பாப்பச்சன் குழும தலைவராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ