உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இணையதளங்களில் மொபைல்போன் எண்களால் குழப்பம்

இணையதளங்களில் மொபைல்போன் எண்களால் குழப்பம்

உடுமலை : கல்வித்துறை இணையதளம், மாவட்ட நிர்வாகத்தின் இணையதளங்களில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், தொடக்கக் கல்வித்துறை மாவட்ட கல்வி அலுவலர்களின் மொபைல் எண்கள் பதிவிடப்பட்டுள்ளன.அந்த துறைகளுக்கென வழங்கப்பட்ட சியுஜி எண்கள் தான் பதிவிடப்பட்டிருக்கும். ஒவ்வொரு முறையும் அந்த எண்களை பயன்படுத்துவோர் ஓய்வுபெறும் போது அல்லது அதிக நாட்களாக பயன்படுத்தாமல் விடும்போது, அவர்களின் சியுஜி மொபைல் எண்கள் செயல் இழந்து விடுகிறது. அவை வேறு அலுவலர்களுக்கு வழங்கப்படுகிறது.இந்த மாற்றங்கள், இணையதளங்களில் புதுப்பிக்கப்படுவதில்லை. பொதுமக்கள், பெற்றோர் சம்பந்தப்பட்ட அலுவலர்களை மொபைல் போனில் அழைத்தால், அவை வேறு அலுவலர்களுக்கு செல்கிறது. இப்பிரச்னையால், அலுவலர்களும் குழம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை