| ADDED : ஆக 21, 2024 11:52 PM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு வட்டாரத்தில், பாகற்காய், பீர்க்கங்காய், சுரைக்காய் போன்ற கொடி வகை பயிர்கள், ஆண்டு தோறும், 100 ஹெக்டேருக்கு அதிகமாக பயிரிடப்படுகிறது.இந்த கொடி வகை பயிர்களில் பூச்சி தாக்குதல் அதிகம் இருக்கும். இதை கட்டுப்படுத்த, பூச்சி தாக்குதல் ஏற்பட்ட காய்களை பறித்து அழிக்க வேண்டும். கூட்டுப்புழுக்களை உழவு செய்து மண்ணில் இருந்து வெளி கொணர்ந்து அழிக்க வேண்டும்.பீர்க்கங்காயை கவர்ச்சி பயிராக பயிரிட்டு அதன் இலையில் அடியில் சேரும் ஈக்களை, மாலத்தியான் 0.1 சதவீதம் தெளித்து அழிக்க வேண்டும். மற்றும் சிட்ரானல்லா எண்ணெய், நீலகிரி மர எண்ணெய், வினிகர் போன்றவைகளை கொண்டு கவர்ச்சி பொருளாக வைத்து ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்.மாலத்தியான் மற்றும் க்யூலூர் இரண்டையும் சம அளவு கலந்து, பாலித்தீன் பைகளில் 10 மில்லி லிட்டர் என்ற அளவில் எடுத்து, நச்சு பொரியாக பயன்படுத்த வேண்டும். இதை ஹெக்டேருக்கு 25 என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் கொடி வகை பயிர்களில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த முடியும். இத்தகவலை கிணத்துக்கடவு தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.