கோவை : புறநகர் குறுமையத்துக்கு உட்பட்ட கேரம் போட்டியில், செல்வபுரம் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் சாம்பியன் பட்டம் வென்றனர்.புறநகர் குறுமையத்துக்கு உட்பட்ட, மாணவர்களுக்கான கேரம் போட்டி, எஸ்.பி.ஓ.ஏ., பள்ளியில் நேற்று நடந்தது. மாணவர்களுக்கு 14, 17 மற்றும் 19 ஆகிய வயது பிரிவுகளின் அடிப்படையில், ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில், போட்டிகள் நடத்தப்பட்டன. இரட்டையர் பிரிவு முடிவுகள்
14 வயது பிரிவில், செல்வபுரம் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் ஹரிவர்சன், பிரஜின் முதலிடம், ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி மாணவர்கள் சாய்தேவ், விஷ்வா இரண்டாமிடம் பிடித்தனர்.17 வயது பிரிவில், செல்வபுரம் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் தர்சன், மனோ ரஞ்சித் முதலிடம், கமலானந்தன் நினைவு மாநகராட்சி பள்ளி பிருத்திவிராஜ், விஷ்வா இரண்டாமிடம் பிடித்தனர்.19 வயது பிரிவில், வாசவி பள்ளி நிஷாந்த், ஆகாஷ் குமார் முதலிடம், செயின்ட் தாமஸ் பள்ளி பிரணவ் குமார், தஸ்த கீர் இரண்டாமிடம் பிடித்தனர்.