உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சவால்களை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்

சவால்களை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்

கோவை:பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரியின் பட்டயப்படிப்பு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி வளாகத்தில் நடந்தது. இதில், பங்கேற்ற வால்வோ குழுமத்தின் தலைமை அதிகாரி சதிஷ்ராஜ்குமார் கூறுகையில், ''மாணவர்கள் தொடர்ந்து, துறை சார்ந்தும், துறைகளை தாண்டியும் திறன்களை அப்டேட் செய்து கொள்ள வேண்டும். சவால்கள் என்பது இயல்பானது. அதை தைரியமாக எதிர்கொள்ள தயாராக வேண்டும். சமூக பொறுப்புணர்வுடன் செயல்படவேண்டும்,'' என்றார். கல்லுாரி முதல்வர் கிரிராஜ் பட்டயப்படிப்பு முடித்த, 353 பேருக்கு சான்றிதழ்களையும், விருதுகளையும் வழங்கினார். முதலிடம் பெற்ற, 14 மாணவிகள் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். நிகழ்வில், கல்லுாரி ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை