| ADDED : ஜூன் 15, 2024 01:40 AM
கோவை;வக்கீல் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, இன்று கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் நடக்கிறது.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்கங்களின் கூட்டுக்குழு தலைவர் பி.நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னை, திருவான்மியூரை சேர்ந்த வக்கீல் கவுதமன், சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிப்பதோடு, குற்றவாளிகளை கைது செய்ய தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.வக்கீல்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதால், அச்சமின்றி பணி செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற கோரி, மத்திய - மாநில அரசுகளுக்கு, வக்கீல் சங்க கூட்டுக்குழு சார்பில், தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.வரும் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற கூட்டத்தொடரில், இச்சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, நாளை (இன்று) வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, நந்நகுமார் தெரிவித்துள்ளார்.