உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவர்களுக்கு சி.பி.ஆர்., பயிற்சி

மாணவர்களுக்கு சி.பி.ஆர்., பயிற்சி

கோவை:கோவை அரசு மருத்துவமனையில், நேற்று டாக்டர் தினம் கொண்டாடப்பட்டது.தேசிய டாக்டர் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் டாக்டர்களுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்து வருகின்றனர். கோவையிலும் அனைத்து மருத்துவ மனைகளிலும் டாக்டர்கள் தினம் கொண்டாடப்பட்டது. சில மருத்துவமனைகளில் கேக் வெட்டியும், ஆடல், பாடல், கலை நிகழ்ச்சிகள் என மகிழ்ந்தனர். கோவை அரசு மருத்துவமனையில், இதயவியல் துறை சார்பில், மருத்துவ மாணவர்களுக்கு சி.பி.ஆர்., பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், இறுதி ஆண்டு மாணவர்கள், 80 பேர் பயிற்சி பெற்றனர். டீன் நிர்மலா உட்பட டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி