உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பேராசிரியர்களுக்கான கிரிக்கெட் போட்டி

பேராசிரியர்களுக்கான கிரிக்கெட் போட்டி

கோவை;கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி சார்பில் இன்ஜி., கல்லுாரி பேராசிரியர்களுக்கு, மாநில அளவில் கிரிக்கெட் போட்டி நடக்கிறது.கோவைப்புதுார் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுரியில், 'கிருஷ்ணா டிராபி 2024' என்ற பெயரில், மாநில அளவிலான இன்ஜி., கல்லுாரி பேராசிரியர்களுக்கான கிரிக்கெட் போட்டி, கல்லுாரி மைதானத்தில் துவங்கியது.கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் ஸ்ரீ ஆதித்யா, போட்டியை துவக்கி வைத்தார். இயக்குனர் நாராயணா உடனிருந்தார். கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி, பங்கேற்பாளர்களை வாழ்த்தினார்.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 14 இன்ஜி., கல்லுாரி அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு கோப்பை, சிறந்த வீரர்களுக்கு விருதுகள் உள்ளிட்டவை வழங்கப்படவுள்ளன.போட்டிக்கான ஏற்பாடுகளை, கல்லுாரியின் உடற்கல்வித்துறை இயக்குனர் மாரிசெல்வம் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ