உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சி.எஸ்.ஐ., சர்ச் மத போதகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறுப்பினர்கள் போராட்டம்

சி.எஸ்.ஐ., சர்ச் மத போதகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறுப்பினர்கள் போராட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவை சி.எஸ்.ஐ., இம்மானுவேல் சர்ச்சில் ஜூன், 16ம் தேதி நடந்த பிரார்த்தனை கூட்டத்தில், மதபோதகர் பிரின்ஸ் கால்வின் பேசியது ஹிந்துக்களின் மத உணர்வை துாண்டும் வகையில் இருப்பதாக கண்டனங்கள் வலுத்து வருகின்றன.அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு, கடந்த, 2ம் தேதி இரவு ஹிந்து மக்கள் கட்சியினர், ஹிந்து முன்னணியினர் உள்ளிட்ட ஹிந்து அமைப்பினர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், ரேஸ் கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனிலும் புகார் அளித்தனர்.அன்றைய இரவே வழக்கும் பதிவு செய்யப்பட்டு, நான்கு பிரிவுகளில் எப்.ஐ.ஆர்., பதியப்பட்டது. நேற்று மாலை வரை அவர் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் சர்ச் உறுப்பினர்களே, மதபோதகர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் புகார் மனு அளித்தனர்.ஆலய வழிபாட்டில் பிரின்ஸ் கால்வின் பேசியது, ஹிந்து மதத்தின் நம்பிக்கைக்கு அவதுாறு ஏற்படுத்துவதுடன், இந்திய இறையாண்மையை சீர்குலைக்கும் வகையிலும் இருப்பதாக கொதித்துப்போன சர்ச் உறுப்பினர்கள், அவரை மாற்றுமாறு பேராயர் திமோதி ரவீந்தரிடம் முறையிட்டுள்ளனர்.ஆனாலும், நடவடிக்கை எடுக்காததால், 20க்கு மேற்பட்ட சர்ச் உறுப்பினர்கள் நேற்று சி.எஸ்.ஐ., இம்மானுவேல் சர்ச் வளாகத்தில் கூடினர். பின்னர், அங்குள்ள அலுவலகத்தை பூட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆலய உறுப்பினர் ஜோஸ்வா டேனியல் கூறுகையில், ''எங்கள் ஆலயத்தின் புனிதமான பலிபீடத்தை, தனது சுயலாபத்துக்காக பிரின்ஸ் கால்வின் பயன்படுத்தியுள்ளார். அவரை மாற்றுமாறு பேராயர் திமோதி ரவீந்தரிடம் முறையிட்டும், எந்த நடவடிக்கையும் இல்லை. நடவடிக்கை எடுக்கும் வரை, இதுபோன்ற போராட்டங்கள் தொடரும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

குறையொன்றுமில்லை
ஜூலை 06, 2024 19:34

என்ன சொல்ல....


Muralidharan raghavan
ஜூலை 06, 2024 14:43

நான் பார்த்த வகையில் பரம்பரை பரம்பரையாக கிறிஸ்தவர்களாக உள்ளவர்கள் இப்படி இருப்பதில்லை.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 06, 2024 13:51

அவரவர் மதக்கொள்கைப்படி அவரவர் மதம் சரி ...... உங்கள் மதத்தை நீங்கள் பின்பற்றுங்கள் ...


ஆரூர் ரங்
ஜூலை 06, 2024 14:15

உலகின் பெரிய மதங்கள் தம்மை நம்பாதவன் பாவி, நரகம் நிச்சயம் என்கின்றன. இது அவர்களுக்குத் முக்கிய கொள்கை. மதசார்பற்ற நாட்டில் இவற்றை அனுமதிக்கலாமா?


GoK
ஜூலை 06, 2024 11:55

உண்மையான கிருத்துவர்கள் இந்த மாதிரி பேச்சுகளிலும் செயல்களிலும் ஈடு பட மாட்டார்கள். சொல்லப்போனால் எந்த மதத்திலும் அடுத்த மதங்களை இழிவு செய்ய சொல்லாது.


Sridhar
ஜூலை 06, 2024 12:10

உங்களுக்கு நல்லா தெரியுமா?


Sridhar
ஜூலை 06, 2024 11:54

நாடு முழுவதுமுள்ள காவல் நிலையங்களில் புகார் கொடுத்து இந்த ஆளை ஊர் ஊரா அலையவிடலாமே? ஏன் பொம்மை மட்டும் நடவடிக்கை எடுக்கலன்னு குறை சொல்லிட்டு காலத்தை ஓட்டணும்?


kulandai kannan
ஜூலை 06, 2024 11:35

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டையே எதிர்க்கும் நபர்கள், ஒரே உலகம் ஒரே மதம் என்று மாற்றத் துடிக்கும் இரண்டு குரூப் களைக் கண்டிக்காதது ஏன்?


TSRSethu
ஜூலை 06, 2024 10:12

இவர்களுடைய இந்த போராட்டம் இந்த நபர் பேசியதற்காக அல்ல. அவர்களுக்குள் உள்ள நிர்வாக பிரச்சனைக்காக போலவே தெரிகிறது.


sundarsvpr
ஜூலை 06, 2024 09:01

தமிழக காவல்துறை தலைமை அமைச்சர் கட்டுப்பாட்டில் உள்ளது. இவர் நினைப்பதைத்தான் காவல்துறை செய்யும்.


Tamil Motivational
ஜூலை 06, 2024 08:48

இதுவே இவர் பாகிஸ்தான் நாட்டில் இஸ்லாமிய மதத்தை தவறாக பேசியிருந்தால் அன்பை பரிசலிதிருப்பர்கள்...


Vijay
ஜூலை 06, 2024 08:40

திமுக மற்றும் காங்கிரஸ் வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு. அதை விட கேடு அதற்கு முட்டு கொடுக்கும் தமிழக ஊடகங்கள்.


M Ramachandran
ஜூலை 06, 2024 09:17

சரியாக சொன்னீர்கள்.


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ