உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கல்லுாரி மாணவருக்கு வெட்டு; கும்பலுக்கு போலீசார் வலை

கல்லுாரி மாணவருக்கு வெட்டு; கும்பலுக்கு போலீசார் வலை

போத்தனூர் : ஈச்சனாரி அருகேயுள்ள தனியார் பல்கலையில் இரண்டாமாண்டு பயில்பவர், சரண் பிரபு, 19. சீரபாளையம், ஜெகதீஷ் நகரில், நண்பர்கள் அருண், சரணுடன் தங்கியுள்ளார், கடந்த, 22ம் தேதி இவரது நண்பர்களான தீபன்ராஜ், ஹர்ஷன், அபிஷேக், ஆர்யா ஆகியோர் இவரது அறைக்கு வந்தனர். பின் தீபன்ராஜ், அருண், சரண் ஆகியோர் ஒத்தக்கால் மண்டபம் சென்றுவிட்டனர், மறுநாள் அதிகாலை அறையின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, சரண் பிரபு எழுந்து பார்த்தார். முன்பே அறிமுகமான ராமநாதபுரத்தை சேர்ந்த, அருண்பிரசாத் மற்றும் சிலர் நின்றிருந்தனர். அருண்பிரசாத், சரண் பிரபுவிடம், 'தீபன் ராஜ் எங்கே' என கேட்டு, அறையின் கதவு, ஜன்னலை உடைத்துள்ளனர். அருண்பிரசாத் தன்னிடமிருந்த கத்தியால், சரண் பிரபுவை வெட்ட முயன்றார். தடுத்தபோது சரண் பிரபுவின் இடது கை நடுவிரல், முதுகில் காயமேற்பட்டது. சத்தம் கேட்டு அருகேயுள்ள அறைகளில் இருந்தவர்கள் வந்தனர். இதையடுத்து அருண்பிரசாத், சரண் பிரபுவை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்து, அங்கிருந்து உடன் வந்தோருடன் தப்பினார். சரண் பிரபு புகாரில், மதுக்கரை போலீசார் தப்பிய கும்பலை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ