| ADDED : ஜூலை 02, 2024 02:13 AM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சியில், வார்டுகளில் 2.5 அடி அகலம், 3 அடி உயரத்தில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான மழைநீர் வடிகால், நீரோட்டம் பார்த்து கட்டப்படாமல் உள்ளது.இதனால், கனமழை பெய்யும் போது, நீரோட்டம் தடைபட்டு, வடிகால் பயனற்றதாகி விடுகிறது. மேலும், நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டிய மழைநீர், சாலையில் தேங்குகிறது. முறையாக திட்டமிடாமல் அமைக்கப்படும் வடிகால் வீணாகிறது.மக்கள் கூறியதாவது:நகரின் பிரதான சாலைகள் மேம்படுத்தப்பட்டும், முறையாக மழைநீர் வடிகாலில் அமைக்கப்படவில்லை. இதேபோல், குடியிருப்பு பகுதிகளிலும், நீரோட்டத்திற்கு தடை ஏற்படாத வகையில், வடிகால் அமைக்கப்படாமல் உள்ளது.குறிப்பிட்ட சில வார்டுகளில் மட்டுமே மழைநீர் வடிகாலில் உள்ள தேக்கமடையும் கழிவுகள் அகற்றப்படுகிறது. இனி வரும் நாட்களில், வடிகால் கட்டமைப்பு பணிகள் மேற்கொண்டால், நீரோட்டம் பார்த்து மழைநீர் வடிகால் கட்டினால், கழிவுநீர் தேங்காமல் வெளியேறும்.இவ்வாறு, கூறினர்.