உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டான்டீ தோட்ட தொழிலாளர்கள் சம்பளம் வழங்காததால் தவிப்பு

டான்டீ தோட்ட தொழிலாளர்கள் சம்பளம் வழங்காததால் தவிப்பு

வால்பாறை: டான்டீ' தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வால்பாறை அடுத்துள்ளது சின்கோனா (டான்டீ) தேயிலை தோட்டம். இங்குள்ள லாசன், ரயான் அகிய கோட்டங்களில், 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு நாள் தோறும் தினக்கூலியாக, 453.60 ரூபாய் வழங்கப்படுகிறது.இந்நிலையில், மாதம் தோறும், 7ம் தேதி தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளம் நேற்று வரை வழங்கவில்லை. இதனால், தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.'டான்டீ' தொழிலாளர்கள் கூறியதாவது: அரசு தேயிலை தோட்டத்தில், வனவிலங்குகள் அச்சுறுத்தலுக்கு இடையே பணியாற்றுகிறோம். குடியிருப்பு பகுதியில் எந்தவித அடிப்படை வசதியும் நிர்வாகத்தின் சார்பில் செய்து தருவதில்லை.இந்நிலையில், மாதம் தோறும், 7ம் தேதி வழங்க வேண்டிய சம்பளம், இன்னும் வழங்கவில்லை. தனியார் எஸ்டேட் நிர்வாகத்தில் குறிப்பிட்ட தேதியில் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குகின்றனர்.இவ்வாறு, கூறினர்.'டான்டீ' அதிகாரிகளிடம் கேட்ட போது, 'நிதி நெருக்கடியால் சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. குன்னுார் தலைமை அலுவலகத்தில் இருந்து தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான உத்தரவு வந்த பின், உடனடியாக சம்பளம் வழங்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ