| ADDED : ஜூலை 19, 2024 04:04 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி ரோடுகளில் வைக்கப்படும், 'பேரிகார்டு'கள் காற்றுக்கு சாய்ந்து ரோட்டில் கிடப்பதால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.பொள்ளாச்சி பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தவும், வாகன நெரிசலை தவிர்க்கவும், ரோட்டை குறுக்காக கடக்காமல் இருக்க, 'பேரிகார்டு'கள் அமைக்கப்பட்டுள்ளன.பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில், சப்-கலெக்டர் குடியிருப்பு பகுதி அருகே, ரோடு திருப்ப பகுதியை தடுத்து, 'பேரிகார்டு' வைக்கப்பட்டு இருந்தது. தற்போது, பலத்த காற்றுடன் மழை பெய்யும் நிலையில், பேரிகார்டு ரோட்டில் சரிந்து, விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'விபத்துகளை தடுக்க வைக்கப்பட்ட பேரிகார்டுகளால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. பலத்த காற்றுக்கு சரிந்த பேரிகார்டுகளால், வாகன ஓட்டுநர்கள் தடுமாற்றம் அடைகின்றனர். இதுகுறித்து கவனம் செலுத்தி, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.