உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டி.சி., அளித்து மாணவர்களை அனுப்பும் முயற்சி கூடாது

டி.சி., அளித்து மாணவர்களை அனுப்பும் முயற்சி கூடாது

கோவை;அரசு உதவி பெறும் மேல் நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 15 மாணவர்களுக்கு, மாற்று சான்றிதழ் தந்து வெளியே அனுப்புவதை தடுத்து நிறுத்த வேண் டும் என, மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன், கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.மனுவில் அவர் கூறி இருப்பதாவது:சுல்தான்பேட்டை ஒன்றியம் சின்ன வதம்பச்சேரியில் உள்ள சொக்கர் செட்டியார் மல்லம்மாள் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் 15 பேருக்கு, மாற்று சான்றிதழ் வழங்கி, பள்ளியை விட்டு அனுப்புவதாக தகவல் வந்துள்ளது. இந்த மாணவர்கள் அங்கு 10ம் வகுப்பில் தொடர்ந்து படித்தால், 100 சதவீதம் தேர்ச்சி வராது என்பதால், இப்படி வெளியே அனுப்ப முடிவு செய்வதாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை