உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காய்கறி வரத்து குறைவு விலையில் மாற்றம்

காய்கறி வரத்து குறைவு விலையில் மாற்றம்

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டுக்கு, காய்கறிகளின் வரத்து குறைவாகவும், விலையில் மாற்றமும் காணப்பட்டது.கிணத்துக்கடவில் முக்கிய மார்க்கெட்டாக தினசரி மார்க்கெட் உள்ளது. இங்கு காய்கள் வரத்து குறைந்த அளவே இருந்ததாகவும், விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.காய்கள் விலை நிலவரம் குறித்து, வியாபாரிகள் கூறியதாவது:கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், நேற்று தக்காளி பெட்டி (15 கிலோ) 300, தேங்காய் 16 (ஒன்று), கத்தரிக்காய் கிலோ, 30, முருங்கைகாய் -- 30, வெண்டைக்காய் - 50, முள்ளங்கி - 30, பூசணிக்காய் - 15, அரசாணிக்காய் - 15, பாகற்காய் - 95, புடலை - 25, சுரைக்காய் - 26, பீர்க்கங்காய் - 100, பீட்ரூட் - 30, அவரைக்காய் - 65, பச்சை மிளகாய் - 70 ரூபாய்க்கு விற்கப்பட்டது.கடந்த பத்து நாட்களுக்கு முன் இருந்த விலை மாறுபட்டுள்ளது. இதில், தக்காளி (15 கிலோ) 50 ரூபாய் விலை குறைந்துள்ளது. தேங்காய் 2 ரூபாயும், முள்ளங்கி,- 7ம், அரசாணிக்காய் 5ம், அவரைக்காய், 25 ரூபாய் விலை சரிந்துள்ளது.முருங்கைக்காய், பீர்க்கங்காய், பச்சைமிளகாய் 10ம், வெண்டைக்காய், பாகற்காய், புடலை, பீட்ரூட் 5ம், சுரைக்காய் 6 ரூபாய் வரையிலும் விலை அதிகரித்துள்ளது. கோடையையொட்டி, நாளுக்கு நாள் காய்களின் விலை அதிகரித்து வருகிறது.மேலும், வரத்தும் குறைந்து வருகிறது. கோடை முடிந்த பின், காய்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.இவ்வாறு, வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ