| ADDED : ஏப் 24, 2024 10:31 PM
உடுமலை : ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதற்கான இணைப்பு வழங்குவதில், தாமதமாவதால் பள்ளி நிர்வாகத்தினர் அதிருப்தியில் உள்ளனர்.அரசுப்பள்ளிகள் தொழில்நுட்ப ரீதியாகவும் மேம்படுத்த, ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. புதிய கல்வியாண்டு முதல், அரசு துவக்கப்பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்புகள் துவக்கப்பட உள்ளன.இதற்கான வகுப்பறைகளை, தயார்நிலையில் வைத்திருப்பதற்கு தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், ஸ்மார்ட் வகுப்பறைக்கான சாதனங்கள் விரைவில் பொருத்தப்பட உள்ளதால், பள்ளிகளில் அதற்கான இணைய இணைப்பு பெற்று வைத்திருக்கவும் அறிவிக்கப்பட்டது.ஆனால், உடுமலை சுற்றுப்பகுதி அரசுப்பள்ளிகளில் இணைப்பு பெறுவதற்கு விண்ணப்பித்து, பல நாட்களாகியும் வழங்காமல் இருப்பதால் குழப்பத்தில் உள்ளனர்.தலைமையாசிரியர்கள் கூறியதாவது:நடப்பு கல்வியாண்டு முடிந்து விடுமுறையும் அறிவிக்கப்பட்டு விட்டது. ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதற்கு, விடுமுறையில் தொழில்நுட்ப குழுவினர் வருவது குறித்து கல்வித்துறையில் தொடர்ந்து அறிவுறுத்துகின்றனர்.இணைப்பை விரைவில் பெற்றிருக்கவும் கூறுகின்றனர். ஆனால் இணைப்புக்கு விண்ணப்பித்து பல நாட்களாகி விட்டது. இதுவரை பல பள்ளிகளில் இணைப்பு வழங்கப்படவில்லை.இவ்வாறு, கூறினர்.