உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊரக வளர்ச்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

அன்னுார்:கனவு இல்ல திட்டத்தில் கட்டமைப்பு வசதி ஏற்படுத்தக் கோரி, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.'கனவு இல்லத் திட்டம் மற்றும் ஊரகப்பகுதிகளில் பழுதடைந்த சாய் தள வீடுகள் மற்றும் ஓட்டு வீடுகளை பழுது பார்க்கும் திட்டம் ஆகியவற்றுக்கு போதுமான ஊழியர் கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும். கனவு இல்ல திட்ட பயனாளிகள் தேர்வுக்கு திருத்தப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட வேண்டும். இத்திட்டத்தை நிறைவேற்ற கால அவகாசம் அளிக்க வேண்டும்' என வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், நேற்றுமுன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாநில துணைத்தலைவர் செந்தில்குமார் கோரிக்கையை விளக்கிப் பேசினார். வட்டார வளர்ச்சி அலுவலர் உமா சங்கரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள், பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ