உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டெனிகாய்ட், கேரம் போட்டி மாணவர்கள் அசத்தல்  வெற்றி

டெனிகாய்ட், கேரம் போட்டி மாணவர்கள் அசத்தல்  வெற்றி

கோவை;எஸ்.எஸ்., குளம் குறுமைய டெனிகாய்ட் மற்றும் கேரம் போட்டிகள் சுதந்திர மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.கோவை மாவட்ட எஸ்.எஸ்., குளம் குறுமைய டெனிகாய்ட், கேரம் போட்டிகள் சுதந்திர மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில், 17 வயதிற்குட்பட்ட டெனிகாய்ட் விளையாட்டில் ஒற்றையர் பிரிவில், 10ம் வகுப்பு மாணவர் நாகரோஷன் முதல் இடம் பெற்றார். அவர் வருவாய் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.17 வயதிற்குட்பட்ட இரட்டையர் பிரிவில், 10ம் வகுப்பு மாணவர்கள் சூர்யா மற்றும் நாகரோஷன் முதல் இடம் பெற்று, வருவாய் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். 14 வயதிற்குட்பட்ட ஒற்றையர் பிரிவில், 8ம் வகுப்பு மாணவர் ஹரிஸ் மற்றும் இரட்டியார் பிரிவில் மாணவிகள் அக்சிதா, சியாமளா ஸ்ரீ ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்தனர்.கேரம் போட்டியில், 17 வயது உட்பட்ட ஒற்றையர் பிரிவில், 10 வகுப்பு மாணவர்கள் குமரன் முதல் இடம் பெற்றார். அதன் வாயிலாக அவர் வருவாய் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 19 வயது உட்பட்ட இரட்டியார் பிரிவில் பிளஸ் 2 மாணவர்கள் நிஷாந்த் மற்றும் நவீன் சந்துரு இரண்டாம் இடம்பிடித்தனர். 17 வயது உட்பட்ட ஒற்றையர் பிரிவில், 10ம் வகுப்பு மாணவி அனுஷ்கா இரண்டாம் இடம்பிடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை